Posts

Showing posts from 2021

காதல் கவிதை, ரோஜா கவிதை, one side love,

  Version 1 என் புத்தகத்தில் காதல் பாடம் படிக்குதே உன் கூந்தல் தொட்ட ரோஜா எல்லாம்                              -சிவஹரிஷ்   Version 2 உன் கூந்தல் தொட்ட பூக்களுக்கெல்லாம் இறப்பில்லையே என் புத்தகத்தில் வாழும் வரை                            -சிவஹரிஷ் இரண்டு வரிகள் என்ற போதிலும் அதன் நினைவோ பல வழிகள் தாண்டி வந்தது வேலை செய்யும் இடத்தில் ஓய்வு நேரம்போது மரத்தடியில் அமர்ந்திருந்தேன் அப்போது மஞ்சள் நிற பூ ஓன்று விழுந்தது  அதன் அருகிலே வாடிய பூவும் இருந்தது என் என்னம் சொன்னது பாவம் இந்த பூக்கள் எல்லாம் ஓர் நாள் மண்ணாகி விடும் என்று அப்போது அவள் வைத்த பூவை நான் புத்தகத்தில் வைத்தது நினைவுக்கு வந்தது அவளே இல்லை பின் அந்த பூ மட்டும் அங்கு என்ன செய்கிறது என்ற கேள்வி தான்  இவ்வரிகள் நன்றி..... மீண்டொறு நினைவில் சந்திபோம்  இவ்வரிகளை புகைபடமாய் பெற Click here for the picture format For more please visit @enkavidhaigal on instagram

பேனா கவிதை காகித கவிதை காதல் கவிதை

வஞ்சகன் கவிஞன் என்னை கசக்குவதற்குள் ஓர் முற்றுப்புள்ளி முத்தமாவது கொடுத்துவிடு  இல்லையென்றால் என்  காகிதப்  பிறவிக்கு  பயணில்லை துரிகையே..........                                 வஞ்சகன்                   எஸ்.  சிவஹரீஷ் இக்கவிதையின் பிறப்பை பார்க்கலாம்  எப்போதும் போல் கவிதை எழுதவே பேனாவை எடுத்தேன் சிந்தித்தேன் சிந்தித்தேன்  பேனா மை காயும் வரை சிந்தித்தேன்  அந்த காகிதம் அது வரை காற்றில் அடித்தபடியே இருந்தது இருந்தும் எதுவும் தோனவில்லை  எதார்த்தமாய் அதில் ஒரு புள்ளி வைத்தேன் காகிதம் காற்றில் ஆடுவதை நிறுத்தியது நானும் கவிதையை கிறுக்கி பிறவி பயண் கொடுத்தேன்...... காதல் எங்கும் இருக்கிறது அதை வாழ விடுங்கள் காகிதத்தின் காதலை நாம் சேர்த்து வைக்களாம் கிறுக்கிடுங்கள்....... For the picture format of this poem click here For more pls visit @enkavidhaigal on insta

கனவுக் கவிதை , காதல் கவிதை , அவள் நினைவுக் கவிதை......

  பல ஆண்களுக்கு தோன்றும் கனவு தான்  ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் கனவிது  கண் மூடி உறங்கினேன்  கண் முன்னே தோன்றியது இவ்வரிகளின் உருவம் வரிகள் இதோ, நீர் தெளித்து கோலமிட, சேவல் அதை கூவளிட இதைக் காண கதிரவனும்  மெல்ல மெல்ல நடைபோட மஞ்சளிளே நீராடி, கடவுளுக்கு துதி பாடி அருவிக் கூந்தல் அல்லி முடிந்து, சேலையும் அவளணிந்து நான் மயங்க இடைக்காட்டி நாளெங்கும் வதைத்திடுவாள் வீடெங்கும் புகை வாசம், அதில் மணக்கும் உன் வாசம் தேன் சுவைத்த நீர் அதையே, தேனீராய் நான் சுவைப்பேன் எனை கொஞ்சி அவள் எழுப்ப, அதற்கேற்ப நான்  நடிப்பேன்  உன் முகம் பார்த்து  எழுந்தேனே கனவிலிருந்து  தெளிந்தேனே நான் ரசித்த விடியலே!......                   -சிவஹரிஷ் இப்படி நான் கண்ட கனவை யார் வேண்டாம் என்பார் It is available on picture format to get that click here For more visit here @enkavidhaigal  on insta.....

காதல் கவிதை, பேனா கவிதை, போதை கவிதை

நான் எழுதியதில் பிடித்த ஒன்று அவளுக்கான கவிதை இது ஆனால் அவள் மட்டும் இல்லை கிழே கவிதை "உதறிய பின்பே தெளிந்தது உன் பெயர் எழுதிய போதையில்  என் பேனா" அவள் பெயர் எழுதி பார்த்த போது சட்டென எழுதாமல் போனது என் பேனா அதன் வர்நிப்பே இவ்வரிகள் இவ்வரிகளை புகை படத்தில் பெற for pic click here மேலும் பல கவிதைகளுக்கு https://instagram.com/enkavidhaigal?utm_medium=copy_link for my page on insta

எது கவிதை

எது கவிதை! புருவத்திற்கிடையே பொட்டா மஞ்சளாடிய முகமா மொட்டு வைத்த மூக்குத்தியா கூந்தலில் பூத்த முல்லையா  சொல்லி வைத்த மச்சமா கவிபாடும் கம்மலா கழுத்திளைபாறும் முத்துக்களா வரம் கிட்டிய வளையலா இடையில் உறங்கும் முந்தானையா இசைப்பாடும் கொலுசா அவள் கொண்ட நாணமா அதில் விழுந்த நானுமா எது கவிதை! picture for this kavidhai  <click here