எது கவிதை
எது கவிதை!
புருவத்திற்கிடையே பொட்டா
மஞ்சளாடிய முகமா
மொட்டு வைத்த மூக்குத்தியா
கூந்தலில் பூத்த முல்லையா
சொல்லி வைத்த மச்சமா
கவிபாடும் கம்மலா
கழுத்திளைபாறும் முத்துக்களா
வரம் கிட்டிய வளையலா
இடையில் உறங்கும் முந்தானையா
இசைப்பாடும் கொலுசா
அவள் கொண்ட நாணமா
அதில் விழுந்த நானுமா
எது கவிதை!
picture for this kavidhai <click here
Comments
Post a Comment