பேனா கவிதை காகித கவிதை காதல் கவிதை
வஞ்சகன் கவிஞன் என்னை கசக்குவதற்குள்
ஓர் முற்றுப்புள்ளி முத்தமாவது கொடுத்துவிடு இல்லையென்றால்
என் காகிதப் பிறவிக்கு பயணில்லை துரிகையே..........
வஞ்சகன்
எஸ். சிவஹரீஷ்
இக்கவிதையின் பிறப்பை பார்க்கலாம்
எப்போதும் போல்
கவிதை எழுதவே பேனாவை எடுத்தேன்
சிந்தித்தேன் சிந்தித்தேன்
பேனா மை காயும் வரை சிந்தித்தேன்
அந்த காகிதம் அது வரை காற்றில் அடித்தபடியே இருந்தது
இருந்தும் எதுவும் தோனவில்லை
எதார்த்தமாய் அதில் ஒரு புள்ளி வைத்தேன்
காகிதம் காற்றில் ஆடுவதை நிறுத்தியது
நானும் கவிதையை கிறுக்கி பிறவி பயண் கொடுத்தேன்......
காதல் எங்கும் இருக்கிறது
அதை வாழ விடுங்கள்
காகிதத்தின் காதலை நாம் சேர்த்து வைக்களாம்
கிறுக்கிடுங்கள்.......
For the picture format of this poem click here
For more pls visit @enkavidhaigal on insta
Comments
Post a Comment