கனவுக் கவிதை , காதல் கவிதை , அவள் நினைவுக் கவிதை......
பல ஆண்களுக்கு தோன்றும் கனவு தான்
ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் கனவிது
கண் மூடி உறங்கினேன்
கண் முன்னே தோன்றியது
இவ்வரிகளின் உருவம்
வரிகள் இதோ,
நீர் தெளித்து கோலமிட, சேவல் அதை கூவளிட
இதைக் காண கதிரவனும்
மெல்ல மெல்ல நடைபோட
மஞ்சளிளே நீராடி, கடவுளுக்கு துதி பாடி
அருவிக் கூந்தல் அல்லி முடிந்து, சேலையும் அவளணிந்து
நான் மயங்க இடைக்காட்டி
நாளெங்கும் வதைத்திடுவாள்
வீடெங்கும் புகை வாசம், அதில் மணக்கும் உன் வாசம்
தேன் சுவைத்த நீர் அதையே, தேனீராய் நான் சுவைப்பேன்
எனை கொஞ்சி அவள் எழுப்ப, அதற்கேற்ப நான் நடிப்பேன்
உன் முகம் பார்த்து எழுந்தேனே
கனவிலிருந்து தெளிந்தேனே
நான் ரசித்த விடியலே!......
-சிவஹரிஷ்
இப்படி நான் கண்ட கனவை
யார் வேண்டாம் என்பார்
For more visit here @enkavidhaigal on insta.....
Comments
Post a Comment